நட்பு,காதல்,நேர்மை,அன்பு,வலிமை அனைத்தும் கொண்ட கதை. இத்தனை அம்சங்களும் பொருந்தி , விறுவிறுப்பு மாறாமல் கொண்டு செல்லப்பட்டுள்ள விதம் அருமை.
சாணக்யவர்மன் , விஸ்வவர்மன், கெளதம், மித்ரா, கயல் என ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பாத்திர அமைப்பு. பெயருக்கேற்றபடி, சாணக்யவர்மன் சாணக்யத்துடன் ஆட்சி செய்யும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவர் தந்தை மஹாலிங்கம் ஒரு மந்திரி, தம்பி விஷவ்வர்மன், தங்கை கயல். இவர்கள் வாழ்வில் குறுக்கிடும் கெளதம். காவல் துறையில் இருந்தும், இவர் நடவடிக்கைகள் விளங்கவில்லையே என்று நம்மை குழப்பிகிறார்.
இவர்களது வாழ்வை சுற்றி சில மர்மங்கள், ஏன் எதற்கு என்று சொல்லப்படாமல் நகரும் கதை. நவரசங்கள் நிரம்பி வழியாமல், அளவாய் சேர்க்கப்பட்டு, கதைக்கரு கச்சிதமாய் அமைந்து உள்ளது. எளிதில் ஊகிக்க முடியாது, வேகமும் குறையாது செல்கிறது.
நல்ல நட்பு, நல்ல உறவுகள், அவர்களுக்கிடையில் ஆழமான புரிதல்,நிறைந்த வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்று படித்து முடித்ததும் உணர்த்தும் ஒரு நெடுங்கதை.
To buy from Amazon, please click this link
https://www.amazon.in/gp/product/B07X7NVS5C/ref=as_li_tl?ie=UTF8&camp=3638&creative=24630&creativeAS
Excellent Review