உணர்வால் நிகழ்பவை பற்றிய விவாதம் கொஞ்சம் புதிது; கொஞ்சம் பெரிது; ரொம்பவே முக்கியமானது.
நாம் அனைவரும் நமது ஐ .க்யூ வைப்பற்றி யோசித்திருக்கலாம். ஆனால் இ.க்யூ என்ற எமோஷனல் க்யோடியென்ட் பற்றி, அதற்கு நம் வாழ்வில் என்ன பங்கு என்பது பற்றி நம்மில் பலர் யோசித்திருக்கிறோமா? கேள்வி இருக்கட்டும், யோசித்தால் மட்டும் என்ன ஆகிவிடும்? உலகம் மாறிவிடுமா ? என்று நம்மில் பலர் சிந்திக்கலாம்.
வாய்ப்பிருக்கிறது! ஆம் ! நம்மை சுற்றி உள்ள உலகம், நமக்கு இன்பமாய், அமைதியாய், திருப்திகரமானதாக மாற வாய்ப்பிருக்கிறது. இதை பற்றி யோசிக்கும்போதும், உணர்வுசார் அறிவு (எமோஷனல்லி இன்டெலிஜெண்ட் ) கொண்ட ஒருவராக நாம் மாறும்போதும், இந்த மாற்றம் சாத்தியம் தான். இந்த அறிவு நடைமுறை வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை எளிய சம்பவங்கள் மூலமும், திரைப்படங்களில் உணர்வுசார் அறிவு கொண்டு வென்ற தருணங்களையும் மிகவும் எளிய இனிய நடையில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
தன் உணருவுகளை கையாளுதல், பிறகு பிறரின் உணர்வுகைளை உணர்ந்து அவற்றை கையாளுதல் என்று நமது உணர்வுசார் அறிவின் பங்கு நம் வாழ்வில் எப்படி அத்தியாவசியம் ஆகிறது. உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்ற புரியும்படியாக ஒப்புமைகளுடன் அழகாய் எடுத்துரைக்கிறது.
இந்த உணர்வுசாரின் அறிவின் புரிதலும், அதன் பயனையும் அழகாய் உரைக்கும் ஒரு நல்ல புத்தகம்.
சில சிந்திக்க வைக்கும் வரிகள் ..
வலியை மட்டும் அல்ல, வெற்றியாளர்கள் அவமானத்தையும் அலட்சியத்தையும் இன்னும் பல சகிக்க முடியாதவற்றையும் கூட, வரவிருக்கும் ஒரு நன்மைக்காகப் பொறுத்துக்கொள்வார்கள்.
வெளித்தெரியாமல் உள்ளே கனன்று கொண்டிருக்கும் ஏதோ ஓர் உணர்வு, திடீரென பெரிய அளவில் சூறாவளி போல வெளிப்படுவதுதான் உணர்ச்சி வெடிப்பு, பீறிடல்.
அடுத்தவர் மீது வருகிற கோபத்தால் நிகழ்வதில்லை தற்கொலைகள். அவமானம், குற்ற உணர்வு, ஏமாற்றம், இயலாமை போன்ற உணர்வுகளால் நிகழ்வது. அவர்களுக்குத் தேவை சுற்றியிருப்பவர்களின் புரிதல். நாமும் உதவலாம். தடுக்கலாம்.
மனதுக்குள் போடப்பட்ட அந்த எண்ணம் என்ன ஆகும்? அந்த எண்ணம் மனதுக்குள்ளே கிளைக்கும், திளைக்கும், வளரும். மொத்தத்தில் ‘ஜெர்மினேட்’ ஆகும். அதனால் பொங்கும், புகையும். அதுதான் தினசரி அரற்றலாக வெளிப்படுகிறது. சிறு பொறிபட்டதும் திடீரென்று வெடிக்கிறது.
மன்னிப்பு ஒரு மருந்து, மாமருந்து. மன்னிக்கப்படுபவருக்கு அல்ல. மன்னிப்பவருக்கு.
பலரும் நன்கு பேசக்கூடியவர்கள். வெகு சிலரே நல்ல கேட்பாளர்கள்.
To buy from Amazon, please use the below link
Komentáře