கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா
- lakshmimandaleenag
- Aug 23, 2021
- 1 min read
Updated: Sep 3, 2021
மிக சாதாரணமாக தோன்றும் கதை, தொடங்கி, படித் (நடந்)து முடிந்தும் விட்டதா, என்று ஆச்சரியப்படுத்த தவறவில்லை.
கிராமத்துக்கு நாட்டுப்புறப்பாடல்களை பற்றி ஆராய வரும் கல்யாணராமன் அவர் சந்திக்கும் மனிதர்கள் வெள்ளி, மருதமுத்து, சினேகா மற்றும் சிலர்.அங்கே நிலவும் மூடநம்பிக்கைகள் இவற்றை நாம் உணரும்போதே மர்மமான சில நிகழ்வுகள் என்று கதை நம்மை கட்டி போட்டு விடுகிறது.

மனிதனின் உணர்வுகளை இயல்பாய் சொன்ன விதம் நம்மை கதை மாந்தோரோடு ஒன்றிச்செல்ல உதவுகிறது.கதையில் சுட்டப்படும், சில மூட நம்பிக்கைகளை உடைத்தெறியும் விதமும், அதை எழுத்தில் வெளிப்படுத்தும் தைரியமும் 1970களில் அசாத்யமென்றே தோன்றுகிறது.
இறுதியில் பேசப்படும் உரையாடல்களும், அது உறங்க வைத்த உணர்வுகளும், அன்றைய சமூகத்தின் யதார்த்த படப்பிடிப்பு. கரையெல்லாம் இருந்த செண்பகப்பூவின் மணம் ஊரெங்கும் சென்று சேர்ந்ததா என்று அறிந்துகொள்ளலாம் வாருங்கள் !
To buy from Amazon, please click the below link
Comments