சொல்லப்பட்ட ஒரு சொல் மன்னிக்கப்படலாம் மறக்கப்படுவதில்லை !!
தமிழ் மதுராவின், அருமையான கதை இந்த வார்த்தை தவறி விட்டாய்.
ஒரு உறவின் தன்மை, அதில் பங்கெடுத்து உள்ளோர், மற்றவரின் மேல் கொண்ட மதிப்பு, ஈடுபாடு, அன்பு, அவர்தம் கொள்கை போன்ற காரணிகளை பொறுத்து அமைந்துள்ளது. அவ்வுறவு நீர்த்து போகாமலிருக்க இவை முக்கிய தேவை எனலாம்.
பானு இதுதான் நம் கதையின் நாயகியின் பெயர். அவளது கணவன் சந்திரபிரகாஷ். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையாக ஆரம்பமாகிறது கதை. உறவுகளுக்கும் மேலாய், உண்மையான உள்ளன்புடன் உறுதுணையாய், நாங்கள் வெறும் பக்கத்துக்கு வீட்டினரல்ல என்று வழி நெடுகிலும் துணை நிற்கும் நட்பு (பூக்)கள்.
தினமும் தொடரும் கணவனின் வசவுகள், குடும்ப பொறுப்புகள் என அனைத்தையும் அனுசரித்து செல்வதில் முனைவர் பட்டம் பெற தகுதி உள்ளவள் பானு. அழகான தாம்பத்தியம், மனம் பொருந்திய தம்பதியரால் உருவாவது . இவர்கள் வாழ்வில் அது என்னானது என்பதே கதை .
வழிமாறி சென்ற வாழ்வில் வாழ்வதற்கு இப்படியும் ஒரு வழியுண்டு என்பது தான் இக்கதையின் கரு. திருமணம் எனும் பந்தத்தின் மேன்மை, அதை சார்ந்த இருவரின் பொறுப்பே. ஒருவரது அன்று !! எந்த பிரச்சனையும் தீர்வு காண முடியாதது அல்ல என்ற நம்பிக்கையை, நம்முள் விதைக்கிறது இக்கதை .
இல்வாழ்க்கையில் உள்ளோரும், வர விழைவோரும் படிக்க வேண்டிய மாற்றுச் சிந்தனை உள்ள ஒரு நல்ல கதை.
Pratilipi:
Amazon:
இப்பதிவு உங்களுக்கு பிடித்தால் ♡ பொத்தானை அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவிக்கவும். கருத்துகளை பின்னூட்டத்தில் பதிவிடவும். நன்றி.
Comments